Sunday, June 9, 2019

Watch Muthaana Muthalallavo Song with Lyrics from Movie Nenjil Oru Aalayam




படம் : நெஞ்சில் ஓரு ஆலயம் இசை : MS விஸ்வநாதன் பாடியவர் : பி. சுசீலா
Watch Song :



Song Lyrics :

முத்தான முத்தல்லவோ 
மிதந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ 
கடவுள் தந்த பொருளல்லவோ

(முத்தான)

சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ
செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ
மாவடுக் கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ
பூவின் மனமல்லவோ பொன் போன்ற குணமல்லவோ

(முத்தான)

வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ
பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ
தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ

(முத்தான)




More Tamil Songs with Lyrics From Movie Nenjil Oru Aalayam

1 . Song : எங்கிருந்தாலும் வாழ்க

      Singer : ஏ. எல். ராகவன்

2. Song : நினைப்பதெல்லாம்
    Singer : பி. பி. ஸ்ரீநிவாஸ்

No comments:

Post a Comment