Tuesday, April 19, 2022

Watch Aanandha Ragam Song with Tamil Lyrics from Panneer Pushpangal

 Watch Song |:



Song Lyrics :

பெண் : ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்

பெண் : துள்ளி வரும் உள்ளங்களில்
தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும்
இன்பத்தின் ஆனந்த தாளங்களே

பெண் : வெள்ளி மலைக் கோலங்களை
அள்ளி கொண்ட மேகங்களை
காணும் நெஞ்சில்
பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே

பெண் : கள்ளம் இன்றி
உள்ளங்கள் துள்ளி எழ
கட்டி கொண்ட
எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட தாளங்கள் போட
வானெங்கும் போகதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லா லா ல லா லா லா லா லா லா

பெண் : வண்ண வண்ண எண்ணங்களும்
வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது
ஊர்வலம் போகின்ற காலங்களே

பெண் : சின்ன சின்ன மின்னல்களும்
சிந்தனையின் பின்னல்களும்
சேரும் போது
தோன்றிடும் ஆயிரம் கோலங்களே

பெண் : இன்று முதல் இன்பங்கள்
பொங்கி வரும்
இந்த மனம் எங்கெங்கும்
சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேட்கும்
காலங்கள் ஆரம்பம்

பெண் : ஆனந்த ராகம் கேட்கும் காலம்
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
லா லா ல லா லா லா லா லா லா

No comments:

Post a Comment

Enter your email address:

Delivered by FeedBurner

Followers to FreeOldTamilMp3.Com

Follow @freeoldtamilmp3