படம்: ஆனந்த ஜோதி (1963)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் டி.கே.ராமமூர்த்தி
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
Watch Song :
Song Lyrics :
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா
உயிரே விலக தெரியாதா
(நினைக்க......தெரியாதா)
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே உனக்கு மறைய தெரியாதா
அன்பே மறைய தெரியாதா
(நினைக்க......தெரியாதா)
எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
இனிக்க தெரிந்த கனியே உனக்கு கசக்க தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
படர தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா
பனியே மறைய தெரியாதா
(நினைக்க......தெரியாதா)
கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா
தலைவா என்னை புரியாதா
(நினைக்க......தெரியாதா
No comments:
Post a Comment