Thursday, July 28, 2016

Watch Meenamma Menamma Kangal Meenamma Song with Lyrics from Movie Rajathi Raja

Watch Song :


Song Lyrics :


மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா 
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா 
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ 
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ 

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா 
தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா  

சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே 
தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே 
முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி 
தத்தித் தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி 
மோகம் கொண்ட மன்மதனும் பூங்கணைகள் போடவே 
காயம் பட்ட காளை நெஞ்சம் காமன் கணை மூடுதே 
மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ 
சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ 
இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே 
சுகமான புது ராகம் இனி கேட்கத்தான் 

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா 
ஆஹா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா  

இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளித் தூவுங்கள் 
மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தைப் போடுங்கள் 
சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளைத் தமிழ் பேசுங்கள் 
சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் 
பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் 
நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் 
பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் 
சொல்லித் தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் 
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ 
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ 

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா 
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா 
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ 
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ 

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா 
தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா  

No comments:

Post a Comment